செய்திகள்

பலாங்கொடை-இணையமூலம் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியை உட்பட மாணவர்களுக்கு ஆபாச புகைபடங்களை பகிரந்தமை தொடர்பில் முறைப்பாடு ..

இணைய ஊடாக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆசிரியை ஒருவருக்கு வட்ஸ்அப் செயலி ஊடாக ஆபாச புகைபடங்களையும், ஆபாச காட்சிகளையும் அனுப்பியதாக பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளது.

பலாங்கொடை பிரதேச பிரபல்ய தேசிய பாடசாலை ஒன்றில் இணைய ஊடாக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆசிரியைக்கு இவ்வாறு வட்ஸ்அப் செயலி ஊடாக ஆபாச வீடியோக்கள் ஆபாச புகைப்படங்களை அனுப்பிய நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பலாங்கொடை பொலிஸில் பாதிக்கப்பட்ட ஆசிரியையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் குறிப்பிட்ட வகுப்பில் உள்ள 50 மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் வட்ஸ் அப் மூலமாக இந்த ஆபாச காட்சிகளும் வீடியோக்களும் அனுப்ப அனுப்பப்பட்டதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் உபபொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ எம் மயூர சிங்க மேலதிக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஒரு விசேட பொலிஸ் குழுவினரை நியமித்துள்ளாதாக தெரிவித்தார்.

மொஹமட் அலி

Related Articles

Back to top button