செய்திகள்

பலாங்கொடை நகரசபையில் ஏற்பட்ட அமைதியின்மை.

இந்த ஆண்டுக்கான முதலாவது நகரசபை அமர்வு பலாங்கொடை நகரசபையில் ஆரம்பமான
நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலை சபையின் தலைவர் சமிக்க ஜயமினி
விமலசேன முன்வைத்தார்.இதன்போது நிகழ்ச்சி நிரலை மீள பெற வேண்டும் என கோரி
எதிர்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டனர். 2021ஆம் ஆண்டுக்கான பாதிட்டில்
இரண்டு தடவைகளும் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்த நிலையிலும் தொடர்ந்தும்
அந்த கட்சி ஆட்சியின் கீழ் பலாங்கொடை நகர சபை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது
எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே நகர சபை தலைவர் பதவியில் இருந்து தற்போதைய தலைவராக செயற்படும் ஐக்கிய
தேசிய கட்சியின் உறுப்பினர் விலக வேண்டும் என கோரப்பட்டது.
இதனால் சபை அமர்வை தொடர முடியாத நிலையில் சபை நடவடிக்கைகள் அதன் தலைவரால்
பிற்போடப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சபை மீண்டும் கூடியது.
கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கைகளில் பதாதைகளை ஏந்தி மீண்டும் தமது
எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து சபை அமர்வு எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

மோஹட் அலி

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com