செய்திகள்மலையகம்

பலாங்கொடை நன்பேரியல் பெருந்தோட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்..!

பலாங்கொடை நன்பேரியல் பெருந்தோட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்ததை தொடர்ந்து.
 
அத்தியாவசிய பொருட்களை வழங்க சென்றவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.2021.06.27.
நேற்று முன் தினம்  காலை 9 மணி தொடக்கம் மாலை 6மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
 
சிவன் அருள் நிதியத்தின் நிதியுதவியின் கீழ் அன்னை அமைப்பினால் இந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
பொகவந்தலாவ ராகுல தேரர் தலைமையில் நேற்று முன் தினம்  இந்த பொருட்களை வழங்கச்சென்ற போதே தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
 
நன்பேரியல் தோட்டத்திற்குள்  பிரவேசிக்கும் நுழைவாயில் மூடப்பட்டுள்ளதுடன் , 
 
தோட்டத்திற்குள் செல்ல முகாமையாளர் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததையடுத்து பொருட்களை வினியோகிக்க சென்ற தரப்பினருக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையே 
பாரிய வாக்குவாதம் ஏற்பட்டது.
 
சப்ரகமுவ மாகாண சபை ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ,
பொலிஸார், பிரதேச பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட தரப்பினர் அனுமதி வழங்கியுள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது..
 
இலங்கையில் மிக உயரமான பகுதியான நன்பேரியல் தோட்டத்தில் தற்போது ஆடி மாத காற்று ஆரம்பமாகியுள்ளது. 
 
காற்றின் வேகம் அதிகம் என்பதால் வருடா வருடம் இந்த காலப் பகுதியில் மக்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதோடு.
 
இதனால் இந்த பகுதி மக்களுக்கான வருமானம் முழுமையாக இல்லாது போயுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். 
 
 

Related Articles

Back to top button