செய்திகள்

பலாங்கொடை-போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது..

ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 13 பேர் பலாங்கொடை பின்னவள் பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை பின்னவள பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது உந்துருலியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை பி ன்னவள பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபரிடம் இருந்தது சுமார் 20 கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன்,அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த நபரோடு ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட மேலும் 12பேரும் 30.000ரூபா பணமும் உந்துருலி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பலாங்கொடை பின்னவள பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களும் இன்றைய தினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பலாங்கொடை பின்னவள போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி
சமன் தெரிவித்தார்.

மொஹமட் அலி

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com