செய்திகள்

பலாங்கொடை வாகனவிபத்தில் ஒருவர் பலி ..

இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியில் இன்று (05/01/21)காலை இடம் பெற்ற
வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடையில் இருந்து சென்ற இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பாரஊர்தி
ஒன்றும் பலாங்கொடை நோக்கி வந்த உந்துருலி ஒன்றும் நேருக்கு நேர் மோதி குறித்த
விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலாங்கொடை கூரகல ஜெய்லானி பிரதேசத்தைச் சேர்ந்த , பலஙாமுல்ல
முஸ்லிம் பள்ளிவாசல்
மதகுரு ஒருவரே (26) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது பாரஊர்தியின் சாரதியை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவம்
தொடபிள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மோஹட் அலி

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com