செய்திகள்பதுளை

பலாங்கொட தேயிலைத் தொழிற்சாலையொன்றில் பாரிய தீவிபத்து.

பலாங்கொட ஒலுகன்தொட்ட பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தொழிலாளர்களும் பிரதேச குடியிருப்பாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பெருமளவு தேயிலைக் கொழுந்துகள் தீ காரணமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி ரூபா 8 லட்சத்துக்கும் அதிகமானதாக இருப்பதாகவும் தொழிற்சாலை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி குற்றப் பிரிவு அதிகாரிகள் அனர்த்தம் இடம்பெற்ற பகுதியை பரிசோதிக்கவுள்ளனர்.

இந்த அனர்த்தம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

Back to top button