செய்திகள்

பலாலியில் இருந்து இந்தியாவுக்கு வருட இறுதிக்குள் விமான சேவை – ரணில்

இவ்வருட இறுதிக்குள் பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூதூரில் இருந்து வெருகலுக்கான புனரமைக்கப்பட்ட 30 கிலோமீற்றர் நீளமான வீதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைபெறுவததாகவும் சர்வதேசத்தின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு சென்று வரக்கூடிய வகையில் தற்போது பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றதாகவும் இந்த வருட இறுதிக்குள் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Back to top button
image download