செய்திகள்

பலாலி விமான நிலையம் பெயர் மாற்றப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கே உரிய அடையாளங்களில் தனித்துவமானதாக பலாலி விமான நிலையம் காணப்படுகின்றது

அந்த விமான நிலையம் இன்று பெயர் மாற்றப்பட்டது.

இதன்படி பலாலி விமான நிலையம் இன்றிலிருந்து யாழ்ப்பாண விமான நிலையம் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படவுள்ளது.

பலாலி விமான நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே பலாலி விமான நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டது.

இந்த விமான நிலையத்துக்கான விமான செயற்திட்டங்கள் இம்மாதத்தின் மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download