கல்விசெய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் உள்வாங்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது…

பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் உள்வாங்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், முன்னர் உள்வாங்கப்பட்ட 20,000 பேருக்கு மேலதிகமாக, 10,000 மாணவர்கள் கடந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர், ஒரே வருடத்தில் பல்கலைக்கழக வாய்ப்புகளைப் பெற்ற மாணவர்களின் தொகை இவ்வளவு அதிகரிக்கப்பட்டதில்லை.

இதற்கு மேலதிகமாக, இவ்வருடம் திறந்த பல்கலைக்கழகங்களுக்கு, தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்காக புதிதாக 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கும் அவர்கள், முதல் வருடத்திலிருந்தே தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுக்கொண்டே கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கான தயார்ப்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம், இலங்கையில் முதலாவது சுதேச மருத்துவப் பல்கலைக்கழகமாக கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்வி நிறுவனம், தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் உள்வாங்கப்பட்டது.

இவ்வருடம் ஆரம்பமாகும் இரண்டாவது பல்கலைக்கழகமாக, ஓகஸ்ட் மாதம் முதல் வவுனியா பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழங்களில் காணப்படும் சித்த மருத்துவப் பிரிவு, பல்கலைக்கழகப் பீடங்களாகத் தரமுயர்த்தப்படுவதுடன், அரங்கேற்றக் கலைகளை அபிவிருத்தி செய்வதற்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அரங்கேற்றக் கலைகள் பீடம் தாபிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகம்

Related Articles

Back to top button