கல்விசெய்திகள்

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறையை நீக்குவதால் இலவசக்கல்வி முறையே அழிந்துபோகும் – பிரதமர்

கோத்தபாய ராஜபக்ஷ பல்கலைக்கழகத் தெரிவிற்கான வெட்டுப்புள்ளி வழங்கல் முறையை இரத்துச் செய்வதாகவும், அதற்குப் பதிலாக பாடசாலைவாரியாக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைத் தெரிவு செய்யக்கூடிய விஞ்ஞானமுறையொன்றை உருவாக்கவிருப்பதாகவும் கூறுகின்றார்.

அவர் கூறுவதை நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியம்?

வெட்டுப்புள்ளி முறையை நீக்குவதால் இலவசக்கல்வி முற்றாக அழிந்துபோகும் நிலையே ஏற்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலவசக்கல்வியையும் இல்லாமல் செய்யத் திட்டமிடுகின்றார்கள்.

எனவே தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவைத் தோற்கடித்து, சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலுள்ள பொது நூலகத்தில் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து, அவர்கள் முன்நிலையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button