உலகம்

பல்கலை மாணவர்கள் போராட்டம் – டெல்லியில் பதற்றம்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.

டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி கட்டண உயர்வை இரத்து செய்ய வேண்டும், மாணவ மாணவிகளுக்கான ஆடை கட்டுப்பாடு உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அத்தோடு அவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

பேரணியாக செல்லும்போது பொலிஸாருடன் மாணவர்கள் முரண்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் மாணவர்கள் பிரச்சினை குறித்து பேசுவதற்கு அரசு தரப்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கவே விரும்புவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button