செய்திகள்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் அதிரடி கைது.

பல்வேறு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மிரிஹான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்யும் சந்தர்ப்பத்தில் 2 கிராம் ஹெரோயின் 2 கையடக்க தொலைபேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

கொஹூவல, வத்தளை, எல்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலந்தொட்ட பகுதியை சேர்ந்த 29 வயதான குறித்த இளைஞர், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று கங்கொடவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Back to top button