...
காலநிலை

பல இடங்களில் மழை பெய்யக்கூடும்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டின் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளதன் காரணமாக இன்றைய தினம் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அதிகரித்து மழை வீழ்ச்சி பதிவாகின்ற சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 3 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen