செய்திகள்

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிக்காட்டல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிக்காட்டல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, பள்ளிவாசல்களில் தொழுகையின் போது ஒரே நேரத்தில் 100 பேருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தேவையற்ற வகையில் ஒன்றுக் கூடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் அந்த சுகாதார வழிகாட்டல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களின் படி ஒவ்வொரு சமய தலங்களுக்களில் முன்னெடுக்கப்படும் வழிப்பாடுகள் தொடர்பில் தனித்தனியாக கட்டுப்பாடுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button