மலையகம்
பழனி திகாம்பரம் தலைமையில் நாளை ஹட்டனில் கலந்துரையாடல்

ஹட்டன் – நோர்வூட் நிவ்வெளி பிரதான பாதை தாழிறக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு நாளை அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், ஹட்டன், டிக்கோயா பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய கேட்போர் கூடத்தில் நாளை முற்பகல் 10 மணியளவில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தொழில் துறை அமைச்சர் ரவீந்திர சமரவீரவுடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளார்.