செய்திகள்நுவரெலியாமலையகம்

பஸ்கள் குறைவாக சேவையில் இயங்குவதால் – பயணிகள் உட்பட பலரும் பெரும் பாதிப்பு.

(க.கிஷாந்தன்)

அட்டனில் பஸ்கள் குறைவாக இயங்குவதால், அலுவலக ஊழியர்கள் உட்பட பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அட்டனிலும் பஸ்கள் குறைவாகவே செயற்பட்டு வருகின்றது.

இதனால் அட்டன் நகரில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், சேவையில் ஈடுப்பட்டுள்ள பஸ்களில் மருத்துவமனைகளுக்குள் வரும் நோயாளிகளும், பல்வேறு தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகளும், பாடசாலை மாணவர்களும் மிகுந்த சிரமத்துடன், ஆபத்தான நிலையில் குறித்த பஸ்களில் ஏறிச் செல்வதைக் காணமுடிகிறது.

Related Articles

Back to top button