செய்திகள்

பஸ்கள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை மற்றும் ரயில் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கொரோனா ஒழிப்பு செயலணி இதுவரை அனுமதி வழங்கவில்லை. பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டிருந்தாலும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

செயலணி மீள அறிவிக்கும் வரை, இந்த நடைமுறை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை முதல் மாலை வரை சேவையில் ஈடுபடும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

காலை மற்றும் மாலை வேளைகளில் சேவையில் ஈடுபடும் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை 56 வரை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர், போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

Related Articles

Back to top button