செய்திகள்

பஸ்கள் மற்றும் ரயில்கள் சேவையில்.!

பயணக்கப்பட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிடத்தக்களவு பஸ்கள் மற்றும் ரயில்களை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவிக்கிறது.

அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று காலை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, மாகாணங்களுக்குள், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். மேல் மாகாணத்திற்குள் காலை வேளையில் 17 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.

Related Articles

Back to top button