செய்திகள்

பஸ்லில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்! மாத்தறையில் சம்பவம்

புத்தாண்டு விடுமுறையை முடித்து விட்டு மீண்டும் தனது பணிக்காக திரும்பிய பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய கொடூர சம்பவம் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தாதியாக பயணியாற்றி வரும் 29 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண்ணே இந்த துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் அக்குரசவிலிருந்து மாத்தரை வீதியினூடாக பயணித்த பஸ்லில் இடம் பெற்றுள்ளது. நபரொருவர் குறித்த பெண்ணின் அருகில் அமர்ந்து பெண்ணைதொட்டு சில்மிஷன் செய்துள்ளதோடு, அதற்கு மறுத்த குறித்தப் பெண்ணை தனது கைவிரல்களால் மார்பை தொட்டு கடுமையா காயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாவும், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கா மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com