செய்திகள்

பஸ்ஸினுள் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி – எல்பிடியவில் சம்பவம்!

எல்பிட்டிய, அட்டகோட்டேயில் பஸ்ஸுக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 41 வயது ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ஊருகஸ்மன்ஹந்திய, வலிங்குருகெட்டியவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நிலம் தொடர்பான வழக்குக்காக அவர் செல்லும் வழியிலேயே பேருந்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் தற்போது எல்பிட்டிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரைக் இணங்காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download