செய்திகள்நுவரெலியாமலையகம்

பஸ்ஸுக்காக காத்திருந்த மலையக இளைஞர்களுக்கு நடந்த விபரீதம்

மரமொன்றின் பாரிய கிளையொன்று பஸ் தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பஸ்ஸுக்காக காத்திருந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காயமடைந்த மூவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகாமையில் உள்ள ஒஸ்போன் தோட்டத்திலேயே நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பிரதேசவாசிகள் இணைந்ர் குறித்த மூவரையும் மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button