மலையகம்

பஸ் விபத்து – 13 வயது பிள்ளை பலி : 34 பேர் காயம்

பதுளை, அலுகொல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 34 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ் 75 அடி ஆழமான பகுதியிலேயே குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் 13 வயது பிள்ளை ஒன்றே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 3 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button