உலகம்

பாகிஸ்தாதனின் உத்வேகம் 700 கி.மீ இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதித்தது

இந்தியாவுக்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஏவுகணை சோதயொன்றை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணை சோதனை நடவடிக்கையை அடுத்து, இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத் கடற்கரை பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சீனா தவிர்ந்த வேறு எந்தவொரு நாடும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் , அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒவ்வொரு நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி ஆதரவை திரட்ட முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில், இந்தியாவுடன் மோதல்களை நடத்தவும் இம்ரான் கான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் எதிர்வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் யுத்தம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இந்த பின்புலத்திலேயே பாகிஸ்தான் புதிய ஏவுகணை பரிசோதனைகளை நடத்தியுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

700 கிலோமீற்றர் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணைகளையே பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஏவுகணையானது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒன்று என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை , தரை மற்றும் கடல் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.

Related Articles

Back to top button
image download