உலகம்

பாகிஸ்தானில் பேருந்து மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பேருந்து மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தேரா காசி கான் மாவட்டத்திலிருந்து குவெட்டாவுக்கு சென்ற பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிர் திசையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தினால் இந்த இரண்டு வாகனங்களும் தீப்பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைவதற்குள் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்துள்ளன

இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Back to top button