...
விளையாட்டு

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி, இந்த தொடரை கைவிட நியூஸிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தான் ராவல்பின்டி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகயிருந்தது.

எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி, நியூஸிலாந்து அணி போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், ஐந்து இருபதுக்கு இருபது போட்டிகளிலும் விளையாட தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen