உலகம்

பாகிஸ்தான் ராணுவம் குறுந்தூர ஏவுகணையை பரிசோதித்துள்ளது!

பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

காஷ்மீரை மாநிலத்தை கைப்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையில் கடந்த பல வருடங்களாக பிரச்சினை நீடித்து வருகின்றது.

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் பலமுறை இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தியாவும் அதற்கு பதிலடி வழங்கியுள்ளது. கார்கில் யுத்தம் போன்ற மிகப்பெரிய யுத்தங்களும் நிகழ்ந்து பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அண்மையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் தாண்டி 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையை இந்தியா கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது.

இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கையும் தாக்கியளித்தது.

இந்த பரிசோதனை இடம்பெற்று இரண்டு தினங்கள் கடந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம், ஷகீன் -1’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இன்று பரிசோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவ கட்டளை படைப்பிரிவின் செயல்பாட்டு தயார்நிலையை சோதிக்கும் நோக்கில், ஷகீன்-1 ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை 650 கி.மீ. வரை அனைத்து வகையான ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக்கூடியது என பாகிஸ்தான் ராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download