செய்திகள்

பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை!

பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் Shah Mahmood Qureshi நேற்றிரவு நாட்டிற்கு வருகை தந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை, பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் சந்தித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற பின்னர், சிநேகபூர்வ விஜயமாக பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் இன்றிரவு நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

Related Articles

Back to top button