செய்திகள்

பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்..

அரச மற்றும் அரச அனுமதிபெற்ற பாடசாலைகள் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.

பாடசாலைகளை ஆரம்பிப்பது பற்றி சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைக்கு அமைவாகவும், கல்வி அமைச்சு மார்ச் மாதம் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையைப் பின்பற்றியும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அமைவாக ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த எண்ணிக்கை அல்லது அதற்குக் குறைவான மாணவர்களை கொண்ட வகுப்புக்களில் உள்ள மாணவர்களை நாளாந்தம் பாடசாலைக்கு அனுமதிக்க முடியும் என்று தெரிவித்த செயலாளர்,30 மாணவர்களைக்கொண்ட வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர் மாணவர்களின் எண்ணிக்கையை இரண்L FOthf அதாவது 15 மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிப்பது அவசியம் என்று குறிப்பிட்டார்.

30 மாணவர்களுக்கும் அதிகமானால் அந்த வகுப்பு மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்துஇ பாடசாலைக்கு அனுமதிப்பது கட்டாயமாகும். சுகாதார விதிமுறைகளை பேணி பாடசாலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மூடப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகவுள்ளன.

தொழில்நுட்ப பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.

அறிவியல், மொழி மற்றும் புவியியல் பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியும் முகாமைத்துவ பீடத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com