செய்திகள்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை தணிந்து சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் கல்வி, கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தொற்று தடுப்பூசி செலுத்தப்படுமென அமைச்சர் கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் படிப்படியாக திறக்கக்கூடிய பின்புலத்தை முறையாக வகுப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்காக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 20 தடுப்பூசிகள் தேவை எனவும், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி பாடசாலைகளை விரைவாக மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button