செய்திகள்

பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை.!

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி போட்ட பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (12) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும் நாளையும் தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button