...
செய்திகள்

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஆதரவை வழங்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர். செனல் பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் பாடசாலைகளை உடனடியாக மீண்டும் திறக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலால் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மீண்டும் திறக்க உதவும் பொறுப்பு சுகாதாரத் துறையின் ஒரு பகுதியாகவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர்களின் பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்தும் என நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீண்டும் திறக்க சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம், எனவே இந்த செயல்முறை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தொழில்நுட்ப அறிக்கை ஜனாதிபதி, சுகாதார, கல்வி அமைச்சர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சிறுவர்களிடையே தொற்று நோய்களைத் தடுப்பது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, கொவிட் -19 இன் தீவிர நிகழ்வுகளைக் குறைப்பது மற்றும் கொரோனா தொற்றுக்களால் ஏற்படும் சிறுவர் இறப்புகளை அகற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

12 முதல் 18 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப அறிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொகுத்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen