செய்திகள்

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் சேவையில் உள்ள ஆசிரியர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகவிருப்பதாக கல்வியமைச்சு இன்று பகல் அறிவித்துள்ளது.

இந்நாட்டில் சுமார் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர். இதன்படி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீள திறக்கப்படுமென கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை திறப்பது குறித்து ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் ஆசிரியர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரும் தங்களது பிள்ளைகளை நம்பிக்கையுடன் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றப்பட்டால் இந்த மாத இறுதியளவில் பாடசாலைகளை திறப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Back to top button