பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவனுக்கு நடந்த விபரீதம்

நிவித்திகல தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கற்பாறை ஓடை ஒன்றைக் கடந்து செல்லும்போது அதில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவன் தொலஸ்வல பிரதேசத்தை சேர்ந்த மகேஸ்வரன் சுஜீவன் (வயது 11) எனடபவரட என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று பாடசாலை விட்டு தமது நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்ற போது தொலஸ்வல கற்பாறை ஓடை ஒன்றில் தவறி விழுந்து நீரில் அடித்துச் சென்றுள்ளார்.
இதைக் கண்டு அவருடன் சென்ற நண்பர்கள் அந்த பிரதேச மக்களிடம் தெரிவித்ததையடுத்து பிரதேச மக்கள் மேற்படி குறித்த சிறுவனை உயிரிழந்த நிலையில் நீரிலிருந்து எடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மாணவனின் சடலம் தற்போது இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.