மலையகம்
பாடசாலை மாணவன் தற்கொலை -தலவாக்கலையில் சம்பவம்
தலவாக்கலை பெயார்வெல் பகுதியில் பன்னிரண்டு வயது பாடசாலை மாணவன் இன்று காலை தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
நேற்று பாடசாலையில் சக மாணவர்களுக்கிடையேயான கருத்து முரண்பாடே இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பாடசாலை மாணவனின் மரணம் அங்குள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த மாணவனின் மரணம் பற்றி மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.