கல்விசெய்திகள்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட நடவடிக்கை

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி, விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக, கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ் அறிக்கையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு, தொடர்ந்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.

மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பிக்கப்பட உள்ளது.

அதற்கு முன்னர் பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com