பாடசாலை மாணவர்களுக்கான முகக்கவசம் அன்பளிப்பு!

uthavum karangal

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் நிதியுதவியுடன்; யூ.ன் ஹெபிடாட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் கோவிட்19 தொற்றில் இருந்து தோட்ட மற்றும் கிராம மக்களை சுகாதார சமூக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கான அவசரகால செயற்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட படாசாலை மாணவர்களுக்கான 3500 முகக்கவசம் அன்பளிப்பு 2020.11.30ம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான முகக்கவசத்தினை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பீ.ஆர்.புஸ்பகுமார படாசாலை அதிபர்களிடம் கையாளித்தார்.

இந்நிகழ்வில்  யூ.ன் ஹெபிடாட் நிறுவனத்தின்; பிரதி திட்ட முகாமையாளர் எஸ்.எல்.அன்வர்கான் திட்ட பொறியிலாளர் எம். நிமலன் மற்றும் திட்ட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தகவல்:எம்.எச்.ஆஸாத்- பாலமுனை

தொடர்புடைய செய்திகள்