கல்வி
பாடசாலை மாணவர்கள் பரீட்சையிலிருந்து இடை நிறுத்தியது தொடர்பாக விசாரணை

பாடசாலை மாணவர்கள் பரீட்சையிலிருந்து இடை நிறுத்தியது தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைகுழுவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முறைபாட்டுக்கு அமையவே கடந்த வாரம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் , இந்த விசாரணை மீண்டும் 13.11.2018 அன்றும் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாளின் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் கடந்த காலங்களில் பல பாடசாலைகளில் மாணவர்களை சாதாரண தர பரீட்சைகள் எழுதவிடாமல் இடை நிறுத்தப்பட்டது தொடர்பான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார் .