கல்விசெய்திகள்

பாடசாலை மாணவர்கள் 19 பேர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதி..

திடீர் சுகயீனம் காரணமாக 19 பாடசாலை மாணவ மாணவிகள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்திலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 19 மாணவ மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென உடலில் ஒரு வித மாற்றம் ஏற்பட்ட நிலையிலேயே அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட மாணவ மாணவிகளில் நால்வர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button