சமூகம்

பாடசாலை மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை

மாத்தறை – எலவெல்ல வீதியில் உள்ள தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் கற்கை நிறுவனமொன்றுக்கு அருகில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இந்த கத்திக்குத்து தாக்குதல் நேர்ந்துள்ளது.

மாத்தறையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 13 இல் கல்வி கற்கும் ரசிது ஹிம்ஹான் (19) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை குறிப்பிட்டுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
image download