செய்திகள்

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை  கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச்சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்ததுடன், கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related Articles

Back to top button