செய்திகள்

பாணந்துறை சதொச விற்பனை நிலையத்தில் அரிசி, தேங்காய் எண்ணெய் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு!

பாணந்துறை நல்லுருவ பிரதேசத்திலுள்ள சதொச விற்பனை நிலையமொன்றில் இருந்து அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அதன் முகாமையாளர் அளித்த முறைப்பாட்டின் பேரில், விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில் கடையின் பின் பகுதியில் இருந்த பாதுகாப்பு தகடு அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனை நிலையத்தில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படவில்லை எனவும் திருடர்கள் ஜன்னல் ஊடாக உள்ளே சென்றமை கைரேகை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அரிசி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் நிர்வாகம் தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button