அரசியல்

பாதுகாப்பு கோரினார் வடிவேல் சுரேஷ்

தனது உயிரை பாதுகாப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் இன்று கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போதே வடிவேல் சுரேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினர் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளது. எனக்கு வீட்டில் இருக்கவும் பாதுகாப்பு இல்லை. பாராளுமன்றம் வந்தால் மிளகாய் தூள் வீசுகின்றனர். எனது தொகுதிக்கு செல்லும் போது இனவாதம் பேசி என் மீது அசிட் வீசவும் முயற்சிக்கின்றனர்.

இது சம்பந்தமாக பசறை பொலிஸார் அறிந்துள்ளனர். நான் முறையிட்டு 3 நாட்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறான நிலைமையில் நாங்கள் எப்படி வாழ்வது எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button