செய்திகள்

பாதுகாப்பு கோரி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்-பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்

நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக எரிபொருள் தாங்கிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வாவினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் தாங்கி உரிமையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காவிட்டால், பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக தாங்கிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button