செய்திகள்

பானந்துரையில் காணாமல் போன துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

அக்குரஸ்ஸ பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டமை தொடர்பிலான விசாரணையின் போது பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து திருடப்பட்ட டி 56 ரக இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடாக, மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில்  பாணந்துறை பகுதியில் கடமை புரியும் இராணுவ சிப்பாய் ஒருவர் உள்ளடங்குகின்றார்.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து டி 56 ரக இரண்டு துப்பாக்கிகள், மெகசின் மற்றும் துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button