செய்திகள்

பாப்பரசர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை.

அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டியது உறுதிப்படுத்தப்பட
வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக தலைவர்களிடம் தாம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவர்களுடன் நத்தார் ஆராதனையில் ஒன்லைன் ஊடாக
கலந்துகொண்டிருந்த போதே பரிசுத்த பாப்பரசர் இதனை தெரிவித்துள்ளார்.

செல்வந்த நாடுகளினால் அளவுக்கதிகமான முறையில் தடுப்பூசிகள் கொள்வனவு
செய்யப்படும் நிலையில், அதனால் வறிய மக்கள் பாதிப்படையும் சந்தர்ப்பம்
ஏற்படாதிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய கொரோனா தொற்று நிலைமையானது, உலகம் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்பதை
புலப்படுத்தி நிற்பதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, உலகின் சில நாடுகளில் தற்போது நிலைகொண்டுள்ள மோதல்கள் தொடர்பிலும்
பரிசுத்த பாப்பரசர் கவனம் செலுத்தியுள்ளார்.

சிரியா, யேமன், லிபியா, நாகர்னோ – கராப், தென்சூடான், நைஜீரியா, கெமரூன்
மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட
வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button