...
செய்திகள்

பாரம்பரியமற்ற பாதீடொன்று இம்முறை சமர்ப்பிக்கப்படும்..

பாரம்பரிய வரவு – செலவுத் திட்டத்துக்கு அப்பால் சென்ற புதிய பார்வை மற்றும் திட்டங்களுடனான வரவு – செலவுத் திட்டமொன்று இம்முறை இந்த நாட்டுக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்கள் தெரிவித்தார். 
பசுமைப் பொருளாதாரம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஆளுகை போன்ற துறைகளுக்கு இதன்போது முன்னுரிமை அளிக்கப்படும் என்பதோடு, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் கீழ் செயற்பட்டு, நாட்டின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார். 
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பத்திலான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்கள், பல்வேறு துறைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் பதிலளித்தனர்.
“எதிர்வரும் வரவு- செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை” என்ற தொனிப்பொருளின் கீழ், இந்த ஊடகச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
நாட்டுக்கு வருவாயை ஈட்டக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில், பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவை அதிகரிக்கக்கூடிய வருவாய்க் கொள்கைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். 
கிராமிய விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அதேவேளை, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது என்றும், செயலாளர் குறிப்பிட்டார். 
உள்நாட்டு வர்த்தகர்கள், புதிய முதலீட்டாளர்களைப் போன்றே, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்காக, நாட்டின் வளங்களுக்கு மேலதிகமாக, புதிய முதலீட்டு வாய்ப்புகளை நாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார். 
எமது நாட்டின் புவியியல் இருப்பிடத்தைப் பயன்படுத்திக்கொள்ள, வலய நாடுகள் பலவும் எமது நாட்டின் மீது கண் வைத்துள்ளன. அவர்களின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு மாற்று மையங்கள் தேவை. அந்தப் பொருளாதார மறுமலர்ச்சிகளானவை, இதுவரை காணப்பட்ட பொருளாதாரச் செயற்பாடுகளின் ஊடாகவன்றி, பசுமைப் பொருளாதாரம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஆளுகை போன்ற துறைகளை அடிப்படையாகக் கொண்ட தேவைகளின் அடிப்படையிலேயே உருவாகின்றன என்றும், ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார். 

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, உலகப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பிலும், ஜனாதிபதியின் செயலாளர் நீண்ட விளக்கமளித்தோடு, அவ்வாறான நிலைமையின் கீழும், அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கல், எந்தக் குறையுமின்றி ஏனைய செலவுகளைச் செய்தல் மற்றும் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் அரசாங்கம் முன்னெடுத்து வருட் பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்தார். 
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, உலக நாடுகளைப் போன்றே எமது நாட்டினதம் விநியோகச் செயற்பாடுகள் முடங்கின என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் உற்பத்திகளை அதிகரித்துக் கொள்வதைப் போன்றே அவற்றை விநியோகிப்பதற்கான முறைமைகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று சுட்டிக்காட்டிய பி.பீ.ஜயசுந்தர அவர்கள், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், நாடு மீண்டும் வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டார். 
நாடு வழமைக்குத் திரும்பி வருகின்ற அதேவேளை, புதிய பொருளாதார அபிவிருத்தியொன்றை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள், வரவு – செலவுத் திட்டம் பற்றாக்குறையைத் தொடர்ந்து அதிகரிப்பது ஒரு நாட்டுக்கு நல்ல விடயம் அல்லவென்றும் இம்முறை வரவு – செலவும் திட்டப் பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார். 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
02.11.2021

Related Articles

Back to top button

Thubinail image
Screen