...
செய்திகள்

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பிரதமரை இன்று சந்தித்தனர்.

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி தாய்நாட்டை தங்கத்தால் அலங்கரித்த தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சமித துலான் கொடிதுவக்கு ஆகியோர் இன்று (08) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தனர்.

பராலிம்பிக்கில் புதிய சாதனை படைத்து சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் பெருமையை நிலைநாட்டியுள்ளதாக குறிப்பிட்டு கௌரவ பிரதமர் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வரலாற்றை புதுப்பித்து எழுதிய இந்த வெற்றிக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட கௌரவ பிரதமர், விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் வீர வீராங்கனைகளின் பயிற்சிக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ தேனுக விதானகமகே, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.அமல் எதிரிசூரிய, தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் லெப்டினன் கேர்னல் தீபால் ஹேரத், செயலாளர் பந்துல குணவர்தன, ஈட்டி எறிதல் போட்டியின் பயிற்றுவிப்பாளர் பிரதீப் நிசாந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

Back to top button


Thubinail image
Screen