உலகம்

பாராலிம்பிக் கிராமத்தில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜப்பான் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் நிலையிலும், போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த தொற்று ஜப்பானில் வசிக்காத ஒரு விளையாட்டு தொடர்பான ஊழியரை உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்படுவதுடன், மேலதிக விவரங்கள் வழங்கப்படவில்லை.

அமைப்பாளர்கள் இதுவரை பாரா ஒலிம்பிக்குடன் தொடர்புடைய 74 கொரோனா தொற்றுகளை பதிவு செய்துள்ளனர்.

பெரும்பாலும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஜப்பானில் வசிக்கும் விளையாட்டு ஊழியர்கள் மத்தியில். பயிற்சி முகாம்களுக்கான குழுக்களை வழங்கும் உள்ளூர் பகுதிகளில் மேலும் ஆறு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

பாராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 24 அன்று ஆரம்பமாகவுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கை போல் பார்வையாளர்கள் இல்லாது நடக்கும் இப் போட்டிகளில் 160 அணிகளைச் சேர்ந்த சுமார் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய 564 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜப்பான் முன்பை விட 20,000 க்கும் மேற்பட்ட தினசரி புதிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சமீபத்திய நாட்களில் பதிவுசெய்து வருகிறது. 

மேலும் செப்டம்பர் 12 வரை 13 பிராந்தியங்களை உள்ளடக்கிய அவசரகால நிலைகளை ஜப்பான் அரசாங்கம் விரிவுபடுத்தி நீட்டித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen