செய்திகள்

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்றைய அமர்வு இடம்பெறவுள்ளது.

இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற சபை அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இன்றைய அமர்வின் போது காலை பத்து மணி தொடக்கம் 11 மணிவரையான ஒரு மணித்தியாலத்தில் வாய்மொழி வினாக்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பிற்பகல் 4 முப்பது வரையில் இன்றைய தினத்துக்கான விவாதம் சபையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை மாலை 04 முப்பதுக்கு பின்னர் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை ஒன்பதுக்கு மணிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்றும் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com