அரசியல்செய்திகள்

பாராளுமன்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று…

பாராளுமன்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ள கூட்டம் இன்று காலை 9 முப்பதுக்கு ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலான பாராளுமன்ற சபை அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற சபை அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 9 அதிகாரிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அலுவலக ஊழியர்கள் ஐவருக்கும் , பாதுகாப்பு பிரிவில் கடமையாற்று ஒருவருக்கும் , பாராளுமன்றத்துக்கு வௌியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள மூவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com